சந்தேகத்திற்கிடமாக முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊறுபொக்க – ஈகொட பிரதேசத்தில் வைத்து இந்த நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது அதில் தெய்வச்சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் பல இருந்ததாகவும்,நோயாளி ஒருவருக்கு தெய்வப் பரிகாரம் செய்து குணப்படுத்ததுவதற்கே தாம் இதனைக் கொண்டு செல்வதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவர்கள் புதையல் தோண்டுவதற்கே குறித்த பொருட்களை முச்சக்கரவண்டியில்கொண்டு செல்வதை அறிந்து இவர்களை கைது செய்து மொரவக்க நீதவான் நீதிமன்றில்நேற்றைய தினம் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர்களை எதிர்வரும் 31ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.