கச்சதீவு புதிய தேவாலயத்துக்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

290

கச்சதீவில் புதிய தேவாலயம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் மத்திய அரசாங்கம் பாரமுகமாக இருப்பதை கண்டித்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

தேசிய மீனவர் சங்க தலைவர் எம்.இளங்கோவின் கருத்துப்படி, யாழ்ப்பாண ஆயரின் விருப்பப்படியே கச்சதீவில் தேவாலயம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். எனினும் இதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கச்சதீவில் புதிய தேவாலயம் நிர்மாணிக்கப்படுமானால் அது தமிழக மீனவர்களின் ஒத்துழைப்புடனேயே அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (6)

SHARE