இத்தாலியின் உதவி வெளியுறவு அமைச்சர் செனட்டர் பெனேடெட்டோ டெல்லா வெடோவா இலங்கை வந்துள்ளார்.
நேற்று இலங்கை வந்த அவர் நாளை வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
2006ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியின் உயர் அரசியல்வாதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை.
எனவே உதவி வெளியுறவுத்துறை அமைச்சரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
அவர், இலங்கையில், சக்திவளத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மூலோபாய அபிவிருத்தித்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்கிறார்.
இந்தநிலையில் இத்தாலிய பிரதியமைச்சருடன் 4 பேர் அடங்கிய வர்த்தக குழு ஒன்றும் இலங்கை வந்துள்ளது.