இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியை டுவிட்டரில் கிண்டலடித்து விமர்சனம் செய்தவருக்கு அவரது மனைவியும், விளையாட்டு தொகுப்பாளினியுமான மாயண்டி லன்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி பவுண்டரி கோட்டுக்கு அருகில் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார். இதனால் அவரை ரசிகர்கள் அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் டுவிட்டரில் ஒருவர், இந்த கேட்ச்க்கு பிறகு ஸ்டூவர்ட் பின்னி மாயண்டி லன்சருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள தகுதியானவர் என்று அவரை கிண்டலடித்து பதிவிட்டார்.
உடனே பின்னியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றிய அவரது மனைவி மாயாண்டி லன்சர், இதோ செல்ஃபி எடுத்தாச்சு, எங்களை கிண்டலடித்ததற்கு நன்றி என்று பதிவிட்டு பதிலடி கொடுத்தார்.