உலகின் மிக அழகிய தீவுகளில் ஒன்றான தாய்லாந்தின் Koh Tachai தீவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடையிட முடிவு செய்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளால் இந்த தீவின் சுற்றுச்சூழலுக்கு பல ஆண்டுகளாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க தவறினால் மீண்டும் சரிசெய்வது முடியாத விடயமாக மாறும் என தாய்லாந்து சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து Koh Tachai தீவில் சுற்றுலா பயணிகளை இனிமேல் அனுமதிப்பதில்லை என தெரிவித்துள்ளது. சமீப காலமாக இந்த தீவு உலகின் மிக அழகிய தீவுகளில் ஒன்று என தெரிவாகி வருவது பல்வேறு நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்தது.
தாய்லாந்தின் சிறப்பு என கொண்டாடப்பட்ட இந்த தீவானது வெறும் 70 பயணிகளை மட்டுமே அனுமதிக்க கூடியதாக உள்ளது. ஆனால் இந்த தீவின் கண்ணாடி போன்ற நீரும் வெள்ளை மணல் விரித்த கடற்கரையும் இங்கு 1000 பயணிகள் வரை வந்து குவியத்துவங்கினர். மட்டுமின்றி மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் அங்குள்ள பவளப்பாறைகள் பெருமளவு சேதமடையத்துவங்கியது.
இங்கு குவியும் மக்கள் அதிக அளவு படகு சவாரிகளே மேற்கொள்வதாலும் கண்ணாடி போன்று பரந்து விரிந்து காணப்படும் கடலுக்குள் குதித்து ஆழங்கலுக்கு சென்றுவருவதாலும் தீவின் இயற்கை எழில் பாதிப்புக்கு உள்ளகி வருவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி அளவுக்கு அதிகமான சுற்றுலாப்பயணிகளின் வருகையால் இங்குள்ள கடற்கரையில் பெருமளவு குப்பை சேர்வதாகவும், அது இங்குள்ள கடல்வாழ் உயிரனங்களை பாதிக்கச் செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் தீவை பாதுகாக்கும் பொருட்டு தாய்லாந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் இந்த அழகிய தீவில் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறையை கழிக்க முடியாமல் போகும் என கூறப்படுகிறது.