அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பாக நிதி அமைச்சினால் கடந்த வாரம் தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 2014ஆம் ஆண்டின் பொருட்களின் சந்தையின் விலையும், 2016ஆம் ஆண்டில் சந்தையின் விலைவாசி தொடர்பிலுமே குறித்த செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி தொடர்பாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கமானது அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய 2015 நவம்பர் மாதம் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேடவர்த்தமானிக்கமைய கட்டுபாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள பொருட்கள் பலவற்றிட்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகையில் அரசாங்கம் செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வாறு பொறுப்புக்கள் அற்ற நிலையில் செய்திகளை வெளியிடுவதால் வியாபாரிகள்அதிகரித்த விலையில் பொருட்களை நுகர்வோருக்கு விற்பதாக தவறாக மக்கள் எண்ணக்கூடும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர்ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.