டயகம அகரகந்தை பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளாகியது. லிந்துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரகந்தைக்கும் நாகசேனைக்கும் இடைப்பட்ட பகுதியில் 17.05.2016 இரவு இவ் விபத்து சம்பவித்துள்ளது.
கடும் மழை காலநிலையில் எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கெடுக்க முற்பட்டபோதே பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாகவும் பயணித்தவர்கள் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்