சீரற்ற காலநிலையால் 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிப்பு

270

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களை சேர்ந்த 81 ஆயிரத்து 216குடும்பங்களை சேர்ந்த 3 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் 332 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழை வெள்ளம் காரணமாக கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35 ஆயிரத்து 513 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

SHARE