எதிர்பாராத விதத்தில் மிகக்குறுகிய நேரத்தில் கேகாலையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், காணாமல் போனவர்கள் பலர் தேடப்பட்டு வருவதாகவும் இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிவதாக அமைச்சர் கூறினார்.
மக்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் கல்வி போக்குவரத்து மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, புளத்கோபிட்டிய மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதில் 16 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுக்குமான உரிய நிவாரணங்களை வழங்க துரிதபடுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார்.