வாஸ் குணவர்த்தனவின் மனைவி பிணையில் விடுதலை

260

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் முஹம்மத் ஷியாம் படுகொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி ஷ்யாமலி பெரேரா சட்டவிரோத ஆயுத பாவனை மற்றும் போக்குவரத்து குற்றச்சாட்டின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஷ்யாமலி பெரேராவுக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டையும் சமர்ப்பித்து அவர் பிணையில் விடுதலை பெற்றுச் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

SHARE