சீனாவில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையில் இருந்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சீனாவின் Heilongjiang என்ற மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து பெண் ஒருவர் பிறந்த குழந்தையை திருடி சென்றுள்ளார்.
கடந்த 15ம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது, குறித்த தாய் தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த வேளை, குழந்தையை திருடியுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது குழந்தை கட்டிலில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு பொலிசார் நடத்திய விசாரணையில், மறுநாளே அதாவது 16ம் திகதி ஹொட்டல் ஒன்றில் குழந்தையை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து திருடிய பெண்ணை கைது செய்ததுடன் குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.