தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்று முடிவில் அதிமுக அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 140 தொகுதிகளில் முன்னிலை
சென்னை:
கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
முதல் சுற்று முடிவில் அதிமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. 10 மணி நிலவரப்படி அதிமுக 140 இடங்களிலும், திமுக 75 இடங்களிலும் பா.மக. 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவும், திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும் முன்னிலையில் உள்ளனர். விஜயகாந்த், திருமாவளவன் சீமான் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.
முன்னணி நிலவரம்:
ஒரத்தநாடு தொகுதி: அதிமுக வேட்பாளர் முன்னிலை
சைதாப்பேட்டை தொகுதி: திமுக வேட்பாளர் முன்னிலை
திருவையாறு தொகுதி: திமுக வேட்பாளர் முன்னிலை
சோழவந்தான் தொகுதி: திமுக வேட்பாளர் முன்னிலை
திருச்செந்தூர் தொகுதி: திமுக வேட்பாளர் முன்னிலை
ஓமலூர் தொகுதி: அதிமுக வேட்பாளர் முன்னிலை
திருவையாறு தொகுதி: திமுக வேட்பாளர் முன்னிலை
நாங்குநேரி தொகுதி: அதிமுக வேட்பாளர் முன்னிலை
ஆலங்குடி தொகுதி: அதிமுக வேட்பாளர் முன்னிலை
ஆம்பூர் தொகுதி: அதிமுக வேட்பாளர் முன்னிலை
ஆத்தூர்(திண்டுக்கல்) தொகுதி: திமுக வேட்பாளர் முன்னிலை
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி: திமுக வேட்பாளர் முன்னிலை
சேலம் வடக்கு திமுக வேட்பாளர் முன்னிலை
வேப்பனஹள்ளி அதிமுக வேட்பாளர் முன்னிலை
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை
எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை
திருவிடைமருதூர் தொகுதியில் அதிமுக முன்னிலை
அறந்தாங்கி அதிமுக முன்னிலை
ஆரணி : அதிமுக
திருமயம் : திமுக
பல்லடம் : அதிமுக
ஜோலார்பேட்டை : அதிமுக
ஆர்.கே.நகர் தொகுதி: ஜெயலலிதா
கும்பகோணம் தொகுதியில் திமுக முன்னிலை.