இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக கூறியுள்ளார்.
இதேவேளை, அனர்த்த நிலைமைகளினால் பணியாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் சப்ரகமுவ பகுதிகளிலேயே இவ்வாறான நிலை அதிகம் காணப்படுவதாகவும் பிரதி முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பல பிரதேசங்களில் பஸ் டிப்போ நீரிலல் மூழ்கியுள்ளதால் பல பஸ் வண்டிகளில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.