முச்சக்கர வண்டியை திருடிய நபர்கள் கைது

265

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவூன்ஜீன் தோட்டத்திலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றினை திருடி சென்று கொண்டிருந்த வேளையில், குறித்த முச்சக்கரவண்டியினை நீர் வழி மின்சார கால்வாயில் இட்டுச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம், இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் முச்சக்கர வண்டியை திருடி இரத்தினபுரிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த வேளையில், முச்சக்கர வண்டி சாவி இன்றி இயக்க முடியாது போனதால் குறித்த நபர்கள் தள்ளிக்கொண்டு போகும் போது முச்சக்கரவண்டி திடீரென திரும்பி மின்சார உற்பத்தி நீர் வழி கால்வாயில் வீழ்ந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பாக பொலிஸார் கருத்து தெரிவித்த போது, முச்சக்கரவண்டியை இவர்களுக்கு கொண்டு செல்ல முடியாது போனதால் இதனை பாதாளத்தில் தள்ளிவிட்டு இவர்கள் தலைமறைவாக முயற்சி செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் விசாரணைகளின் போது, குறித்த சந்தேக நபர்கள் இரத்தினபுரி ஸ்ரீபாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தெரியவந்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

SHARE