பொலிஸ் வேடத்தில் பெண்ணிடம் ரூ.30 லட்சம் பறிப்பு: நிஜ பொலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

280

சுவிட்சர்லாந்து நாட்டில் பொலிஸ் எனக்கூறிக்கொண்டு இளம்பெண் ஒருவரிடம் ரூ.30 லட்சத்தை பறித்த நபரை நூதன திட்டம் வகுத்து பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சுவிஸின் சூரிச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இளம்பெண் ஒருவர் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துள்ளார்.

அப்போது, வெளியே பொலிஸ் உடுப்பில் இருந்த நபர் ஒருவர் ‘வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்து பணத்தை திருடி செல்வதால், உங்களுடைய பணத்தை பத்திரப்படுத்துங்கள்’ எனக்கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய அந்த இளம்பெண் உடனடியாக வங்கிக்கு திரும்பிச் சென்று 20,000 பிராங்க்(29,60,893 இலங்கை ரூபாய்) பணத்தை எடுத்து வந்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்ற நபர் அங்கிருந்து உடனடியாக சென்றுவிடுகிறார். ஆனால், இளம்பெண்ணிற்கு சந்தேகம் ஏற்பட அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தன்னிடம் பணம் பெற்று சென்ற பொலிசாரின் பெயர் மற்றும் அடையாளங்களை கூறி விசாரித்துள்ளார்.

ஆனால், இந்த பெயர் மற்றும் அடையாளங்களில் பொலிஸ் அதிகாரி யாரும் இல்லை என நிஜ பொலிசார் தெரிவித்தவுடன் இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனினும், பொலிஸ் வேடத்தில் வந்த நபர் மீண்டும் அந்த இளம்பெண்ணை சந்தித்து பணம் ஏமாற்ற வாய்ப்புள்ளதால் அவரை பிடிக்க பொலிசார் ஒரு அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.

பொலிசாரின் திட்டப்படி, அதே இளம்பெண் கடந்த ஞாயிறு அன்று வங்கிக்கு வெளியே நின்றுள்ளார்.

அப்போது எதிர்ப்பார்த்தவாறு அதே நபர் பொலிஸ் உடுப்பில் இரண்டாவது முறையாக வந்துள்ளார்.

அவரிடம் ‘1,00,000 பிராங்க் வரை பணத்தை உடனடியாக பத்திரப்படுத்த வேண்டும்’ எனக்கூறி விட்டு வங்கிக்கு சென்று அந்த தொகையை எடுத்து வந்துள்ளார்.

வெளியே பொலிஸ் வேடத்தில் இருந்த அந்த நபரிடம் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த பொலிசார் அவரை கையும் களுமாக கைது செய்துள்ளனர்.

இந்த நூதன கொள்ளை குறித்து பொலிசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கைது செய்யப்பட்டவர் 31 வயதான துருக்கி நாட்டை சேர்ந்த நபர் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)

SHARE