அரசாங்கம் போர் வெற்றியை இழிவுபடுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்ர்.
உலகின் பயங்கரமான பயங்கரவாத அமைப்பினை தோற்கடித்த நாளைக் கொண்டாடுவதில் தவறில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 310,000 சாதாரண மக்களை படையினர் மீட்டு எடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பும் பாராட்டியிருந்தது.பாராட்டுக்குரிய மனிதாபிமான மீட்புப் பணியாகவே உலக அரங்கில் கருதப்பட்டது.
இந்தப் போரில் ஆயிரக் கணக்கான படையினரும் பொலிஸாரும் உயிர்த் தியாகம் செய்திருந்தனர்.
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை பாதுகாக்கவே இவ்வாறு உயிர்த்தியாகம் செய்யப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் படைவீரர்களை அதிகம் நினைவு கூர்வது சரியில்லை என கூறுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் இதனை எதிர்க்கின்றோம்.
போர் வெற்றியை இழிவுபடுத்த அரசாங்கம் முயற்சிப்பது வெளிச்சமாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதவராக செயற்படும் தரப்புக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே அரசாங்கம் இவ்வாறு படைவீரர்களுக்கு கௌரவம் செலுத்துவதனை தவிர்க்கின்றது.
விளக்குகளை ஏற்றி படைவீரர்களை நினைவு கூருமாறு நாம் கோருகின்றோம் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.