மீண்டும் ஆட்சி அமைக்கிற அம்மா, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அதிமுக

281

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. பின்னர் அதிமுக முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டு கட்சிகளும் சமநிலையில் முன்னிலை வகித்து வந்தது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்தில் அதிமுக முன்னிலை பெற்றது. திமுக பின்னடவை சந்தித்தது. இரண்டு மணி நேர வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் அதிமுக 140 தொகுதிகளிலும், திமுக 70 தாெகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாமக 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது

ஆனால், தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்தில் குறைந்த அளவிலேயே தொண்டர்கள் இருக்கின்றனர்.

தொடர்ந்து அதிமுக முன்னிலை வகித்து வருவதால் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும், முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்திலும் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அதிமுக வினர் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

tamil-nadu-polls-759

SHARE