குப்பை மேடு சரிவு 80 பேர் கோவிலில் தஞ்சம்

257

கம்பளை அம்புலுவாவவத்தகடையில் திடீர் என ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரண்டு வீடுகள் முற்றாக சேதம்டைந்ததுள்ளதுடன், அங்கு வசிக்கும் சுமார் 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அங்கு வசித்த சுமார் 80 பேர் தற்காலிகமாக சிங்கபிட்டிய புத்தர் கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

குறித்த பகுதியில், சுமார் 5 வருடங்களாக தொடர்ந்து போடப்பட்டு வரும் குப்பை மலைப்போல உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களிற்கு முகம்கொடுத்துள்ளனர்.

திடீர் என்று ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மலைபோல உயர்ந்த குப்பைமேடு சரிந்து மண்சரிவு ஏற்பட்டள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணம் கம்பளை நகரசபை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வாரம் முழுவதும் குப்பை போடுவதைத் தடுத்து நிறுத்துமாறு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர், எனினும் இதற்கான ஒரு தீர்வு கிடைக்கபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இவ்வாறான ஒரு அனர்த்தம் இடம் பெறுவதை தடுப்பதற்கு நிச்சயம் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE