சித்தாண்டியில் மரம் நாட்டி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

256

யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு மற்றும் மர நடுகையையும் சித்தாண்டியில் நேற்று நடைபெற்றது.

சித்தாண்டி பொதுமக்கள் மற்றும் வானவில் விளையாட்டு கழக உறுப்பினர்கள் இணைந்து சித்தாண்டி பொது மைதானத்தில் இதனை நடத்தினர்.

நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட முறையில் அரச பாதுகாப்பு படை, மற்றும் வன்னி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான 7வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலிகள் பல்வேறுபட்ட வடிவங்களில் நடைபெற்றாலும் குறித்த கிராமத்து மக்கள் வன்னி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக கொண்டு எதிர்கால சந்ததிக்கு பயன்தரக்கூடிய வகையில் மரங்களை நாட்டி வைத்தனர்.

எதிர்கால சந்ததியினரின் சுற்றுச் சூழல் மற்றும் அதன்பால் செழிப்படையும் வண்ணம் மிகவும் எளிமையான முறையில் மரக்கன்றுகளை நடுவித்தனர்.

கடந்த காலங்களில் மே 18 என்றாலே மரங்கூட நடமுடியாத நிலை காணப்பட்டது, அந்த வகையில் வடக்கு முதலமைச்சர் கடந்த அரசாங்க காலத்தில் குறித்த நினைவு தினத்தில் மரம் நட்டதை பல்வேறுபட்டவர்கள் பலவாறு விமர்சித்த நிலையில், தற்போது வந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதில் தடைகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

SHARE