கொழும்பு மேலும் நீரில் மூழ்கும் அபாயம்

248

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

கொழும்பில் இன்று காலை முதல் இடைக்கிடை மழையுடன் கூடிய வானிலை நிலவும், அதேவேளை மலையகத்தின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவுகின்றது.

இதனால் கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

களனி ஆறு பெருக்கெடுத்தமையே இந்த வெள்ளத்திற்கான காரணமாகும். இதன்படி, வெல்லம்பிட்டி, சேதவத்தை, கொலன்னாவை, கடுவெல, ஹங்வெல்ல மற்றும் களனி ஆகிய பகுதிகளிலேயே இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கினால் 35,513 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30,726 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 801 பேர் பாதுகாப்பான இடங்களை நோக்கி அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 56 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு ஏற்படும் வெள்ளப் பெருக்கு அபாயத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (3)

SHARE