2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று 6 வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் ஜெயலலிதா.
இந்த வெற்றிக்கொண்டாட்டத்தை போயஸ் கார்டன் முன்பாக அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
லட்டு, ரோஜாப்பூ மாலைகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனல் பறக்கிறது அதிமுக தொண்டர்களின் கொண்டாட்டம்.