ஆஸ்திரிய நாட்டு தூதுக்குழுவொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சரை கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
குறித்த சந்திப்பின் போது வடக்கு மாகாண சுகாதார துறையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, ஆஸ்திரிய நாட்டுப் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வடக்கு மாகாணத்தின் வைத்தியசாலைகளின் உட்கட்டுமான அபிவிருத்தி, விசேட வைத்திய பிரிவுகளை தரமுயர்த்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஆஸ்திரியா மத்திய சுகாதார அமைச்சினூடாக வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு நீண்டகால கடன் அடிப்படையில் நிதி வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.