அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்றும், இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பணியாளர்கள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காயமடைந்தவர்கள் அவிஸ்ஸாவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.