தனி நபர்களிடம் நிவாரணங்களை ஒப்படைக்க வேண்டாம் – கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி

243

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தனி நபர்களுக்கு உரிமை கிடையாது என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கப்பார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்புவதற்கு என நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அமைப்புகள் என்ற போர்வையில் தனி நபர்களும் ஈடுபட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. எமது பகுதிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக அறிகின்றோம்.

இது பாரிய மோசடி, முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. ஆகையினால் நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் தனி நபர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவ்வாறு நிவாரணம் கோரி வருகின்றவர்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டாம் எனவும் பொது மக்களை அறிவுறுத்துகின்றோம்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் அவ்வப் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் பிரதேச செயலகங்களினால் மட்டுமே நிவாரணங்களை சேகரிக்க முடியும். பொது அமைப்புகள் இப்பணிகளில் ஈடுபட விரும்பினால் பிரதேச செயலகங்களுடன் இணைந்தே செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE