7 தையல்கள் போட்டும் “மின்னல்” வேகசதம்! விஸ்வரூபம் எடுத்த விராட் கோஹ்லி

320

veerat_kohly_002

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி மீண்டும் சதம் விளாச ’டாக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி பெங்களூர் அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப்- பெங்களூர் அணிகள் மோதின. மழையால் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் பஞ்சாப் அணியின் தலைவர் முரளிவிஜய் வென்ற நிலையில் அவர் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்கத்திலே கெய்லுடன் சேர்ந்து அதிரடி காட்டிய விராட் கோஹ்லி இந்த தொடரில் 4வது முறையாக சதம் விளாசினார்.

50 பந்தில் 12பவுண்டரி, 8 சிக்சர்கள் என விளாசி தள்ளிய கோஹ்லி 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணிக்குஎதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது உள்ளங்கையில் ஏற்பட்ட காயத்தால் அவருக்கு 7 தையல்கள் போடப்பட்டன. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அதிரடி காட்டினார்.

இதனால் பெங்களூர் அணி 15 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் எடுத்தது.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 14 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால் பெங்களூர் அணி ’டாக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

SHARE