மண்சரிவினால் 7 குடும்பங்கள் இடம்பெயர்வு

262

லிந்துலை, சென்கூமஸ் லெமினியர் தோட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 07 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் அங்கிருந்துவெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி 36 பேரும் கொழுந்து மடுவத்திலும் பொது இடங்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால் குடியிருப்பு பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட இயற்கை அனர்த்த முகாமைதுவ அதிகாரிகளால், மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், 05 மாதங்கள் கடந்த போதிலும் இவர்களுக்கான எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் தோட்ட நிர்வாகமும் அரசியல்வாதிகளும் செய்து கொடுக்கவில்லை என்று பாதிக்கபட்ட மக்கள் கூறியுள்ளனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE