லண்டனில் சிறப்பு மிக்க புகழ் பெற்ற அரங்கத்தில் பாட வருகிறார் யேசுதாஸ்

299

சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார அபிவிருத்தியில் Hartley கல்லூரியின் பங்களிப்பு,இலங்கை முழுவதும் அறியப்படும் ஒன்றாகும்.

நமது சமூகத்திற்கு Hartlety கல்லூரி ஆற்றிவரும் சேவைகள் அளப்பெரியது.

எப்போதும் போல், இன்றும் Hartley கல்லூரியின் ஊடாக மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், சட்ட நிபுணர்கள், வங்கியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இன்னும் பல இடங்களில் சமுதாய சேவையாளர்களை இந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது.

Hartley கல்லூரியினுடைய பழைய மாணவர் சங்கமானது பல நாடுகளில் வியாபித்து இருக்கிறது. அதிலே பிரித்தானியாவில் இருக்க கூடிய சங்கமானது, தாயகத்தில் இருக்கும் கல்லூரியின் நலன் கருதியும் அங்கே பயிலும் மாணவர்களின் முன்னேற்றத்துக்காகவும் பாரிய உதவிகளையும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கல்வித்துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாது உலக வாழ்க்கை முறையில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வேலைகளையும் செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தென் இந்திய பாடகர்களையும், லண்டன் வாழ் கலைஞர்களையும் கொண்ட கலை நிகழ்சிகளை நடாத்தி அதன் மூலமாக நிதி சேகரித்து கல்லூரியின் வளர்ச்சிக்காக பாடு பட்டிருக்கிறது Hartley கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம்.

அதே போல், எதிர்வரும் 21 May லண்டனின் சிறப்பு மிக்க அரங்கான Royal Festival மண்டபத்தில் கர்னாடக சங்கீத்தப் பாடல்களின் மூலம் அனைவரது மனங்களையும் கவர்ந்து, இன்னமும் கம்பீரமாய் ஒளிக்கு குரல் வளம் கொண்ட Dr. KJ. யேசுதாஸ் பாட இருக்கின்றார்.

பாடகர் யேசுதாசுடன் இணைந்து பாடகி அல்கா அஜித் அவர்களின் பாடல்களுக்கு லக்ஷ்மன் சுருதி இசைக் குழுவினர் இசை வழங்க இருக்கின்றார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு லங்காசிறி இணையமும் ஊடக அனுசரணை வழங்குவதில் பெருமை அடைகிறது.

SHARE