வன்னி பிரஜைகள் குழுக்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

243

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரஜைகள் குழுக்களின் ஒன்றியத்தின் அங்குராப்பண நிகழ்வு நேற்று முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் நடைபெற்றது.

வவுனியா, மன்னார் பிரஜைகள் குழுவினரும் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையமும் இணைந்து தமது செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில், தமக்கான மாவட்ட இணைப்பை ஏற்படுத்தும் பொருட்டு வன்னி பிரஜைகள் குழுக்களின் ஒன்றியம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது வன்னிப் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகள், அபிவிருத்தி தேவைகள், காணாமல் போனோர் பிரச்சினைகள், அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை கூட்டாக இணைந்து தீர்வைப் பெற தமது செயற்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் இவ் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படவுள்ளது.

இவ் அமைப்பின் தலைவராக மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் வணபிதா இ.செபமாலை, செயலாளராக வவுனியா பிரஜைகள் குழு செயலாளர் ஐ.யசோதரன், உபசெயலாளராக வவுனியா பிரஜைகள் குழு உறுப்பினர் இ.சபேசன், பொருளாளராக முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தின் தலைவர் பா.நவரட்ணம், உறுப்பினர்களாக மன்னாரை பிரதிநிதித்துவப்படுத்தி அ.சகாயம், எஸ்.புண்ணியலிங்கம், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி த.பரமேஸ்வரன், வி.யோகலிங்கம், வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி தா.சலசலோசன், அ.ஜெயச்சந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் வடக்கு, கிழக்கு பிரஜைகள் குழுக்களின் இணைப்பாளர் அ.சகாயம், மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் வணபிதா. இ.செபமாலை மற்றும் உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் தா.சலசலோசன், செயலாளா ஐ.யசோதரன் உள்ளிட்ட உறுப்பினர்கள், முல்லைத்தீவு பிரஜைகள் உரிமைக்கான அமையத்தின் தலைவர் பா.நவரட்ணம் உட்பட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் தமது கருத்துக்களையும் பரிமாறினர்.

அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் வன்னி பிரஜைகள் குழுக்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE