யாழ் மண்ணிலே தென்மராட்சி, கொடிகாமம், கச்சாய் பகுதியில் குடிகொண்டிருந்து பக்தர்களுக்கு அருளையும் மற்றும் புதுமைகளையும் புரியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்ணகை அம்மன் ஆலய விசாகப் பொங்கல் மற்றும் காவடி நிகழ்வு என்பன நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்வுகள் வருகின்ற திங்கட்கிழமை 23.05.2016 நடைபெறவுள்ளது.
காலை 07.30 மணியளவில் காவடி ஆரம்பமாகி மாலை 6 மணிவரையும் காவடி ஆட்டம் நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து இரவு 08.15 மணியளவில் பண்டம் எடுத்து அதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்தல் இடம்பெறும் என்பதை ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளார்கள்.
மேலும் அன்றைய தினம் பாதுகாப்பு ஒழுங்குகள் மற்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.