இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனமும் உதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், என்பனவற்றை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவர் குழுக்கள் உள்ளிட்ட நிவாரணப் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனனர்.
சுத்தமான குடிநீரை விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.