தடைப்பட்டிருந்த மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது கடுகண்ணாவை மற்றும் ரம்புக்கனை இடையிலான ரயில் மார்க்கம் ரயில் போக்குவரத்திற்காக தற்போது திறந்து விடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.
இதனடிப்படையில் உடரட்ட மெனிக்கே மற்றும் பொடி மெனிக்கே ஆகிய ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலவும் சீரற்ற வானிலையினை கருத்திற் கொண்டு இரவு நேர தபால் ரயில் சேவை மாத்திரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.