சீரற்ற காலநிலை தொடர்பாக எதிர்வரும் புதன் பாராளுமன்றத்தில் விவாதம்

264

நாட்டில் கடந்த சில தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் 7ம் திகதிக்கு சபை ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்ட போதும் கட்சித் தலைவர் கூட்டத்தினையடுத்து எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு விசேட பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.

சபை ஒத்திவைப்பு வேளைக்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவணியின் எம்.பியான தினேஷ் குணவர்த்தன சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்தி விவாதிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதன்போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் முழுமையான அறிக்கை கிடைத்ததும் அது தொடர்பாக கலந்துரையாடலாம் அதற்கு முன்னதாக விவாதம் தேவையில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE