பக்கிங்ஹாம் அரண்மனையில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்

290

பிரித்தானியா இளவரசி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் அத்துமீறி நுழைந்த மர்மநபருக்கு, நான்கு மாத கால சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dennis Hennessy (வயது-41), கடந்த 1992 ஆம் ஆண்டு வீடற்ற தனிநபர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறை சென்றவர், தண்டனை காலம் முழுமையாக முடியாத நிலையில் தற்போது, பிணையில் வெளிவந்துள்ளார்.

Dennis Hennessy, பக்கிங்ஹாம் அரண்மனையை வெளியே இருந்து பார்வையிட 10 நிமிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் திடீரென அத்துமீறி அரண்மனை சுவர் மீது ஏறி எச்சரிக்கை அலாரத்தை சேதப்படுத்தி, அரண்மனை மைதானத்தில் குதித்துள்ளார்.

இதன்போது, இளவரசி, அவரது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் அவர்களின் மகன் இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் அரண்மனையில் இருந்துள்ளனர்.

உடனே, அரண்மனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் Dennis Hennessy-யை கைது செய்துள்ளனர்.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காகவும், அரண்மனை அலாரத்தை சேதப்படுத்திய குற்றதிற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறித்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், Dennis Hennessy-க்கு நான்கு மாத கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

SHARE