வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து பரந்தன் ஒன்றியம் நிவாரப் பணியினை ஆரம்பித்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகளை பரந்தன் ஒன்றியம் 444 குடும்பங்களுக்கு வழங்கி உள்ளனர்.
பரந்தன் பகுதியை அண்மித்துள்ள காஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள 94 குடும்பங்களுக்கும், குமரபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள 230 குடும்பங்களுக்கும், உருத்திரபுரம் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 120 குடும்பங்களுக்கும் இன்று ( 21.05.2016) கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து நிவாரணப் பொதிகளை வழங்கி உள்ளனர்.
இவ் நிவாரணப் பணியில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், பரந்தன் ஒன்றிய நிர்வாகத்தினர், மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாஸ்கரன் கதீஷன்
பிராந்திய செய்தியாளர்

