வீதியினைப் புனரமைத்துத்தருமாறு மக்கள் கோரிக்கை

306

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட  உருத்திரபுரம் கிழக்கு கிராமத்தின்  4ம் குறுக்கு வீதி  கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் முற்றாக  அழிவடைந்துள்ளது  .

இவ்வீதி 1983ம் ஆண்டு தொடக்கம்  பெய்யும் கடும்  மழையினால் பாதிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிகளிடம் அரசியல்வாதிகளிடமும் இந்த கிராம மக்கள் முறைபாடுகளை தெரிவித்தும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை எனவும்  கடந்தமுறை பெய்த மழையினால் வீதி பாதிக்கப்பட்ட போது வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் வரை  எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இந்த வீதியில் 175 குடும்பங்கள் உள்ளனர். நாளந்தம் இந்த வீதியுடாக 500 அதிமான மக்கள் பயணிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இந்த வீதியூடாக  பயணிக்கும்  பாடசாலை மாணவர்கள் உத்தியோகத்தரகள் நோயாளர்கள் எனபலரும் முழுமையாக தங்களுடைய அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்களாக  உள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு இந்த வீதியை திருத்தி தருமாறு  மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

Exif_JPEG_420
Exif_JPEG_420
SHARE