யார் விமர்சித்தாலும் வீடமைப்பு திட்டம் சிறப்பாகவே நடைபெறுகின்றது – திலகர் எம்.பி

313

வீடமைப்பு திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றபோதும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும்  எமது திட்டம் சிறந்த முறையில் நடைபெறுகின்றது. தனி வீட்டுத்திட்டமானது முதற்கட்டமாக 100 நாள் வேலைத்திடத்தில் மாதிரி வீடமைப்பு திட்டமாக 300 வீடுகள் கட்டப்பட்டது.  பின்னர்  மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என கட்டம் கட்டமாக எமது வேலைத்திட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை கால நிலையில் அனர்த்தத்திற்குள்ளான குடியிருப்புகள்  மற்றும் அனர்த்தத்திற்குள்ளாகும் என அச்சத்திலுள்ள பிரதேசங்களை நேரடியாக சென்று  பார்வையிட்டார்.

பொகவந்தலாவ மஸ்கெலியா நோட்டன் பிரதேசங்களுக்கு 22.05.2016 அன்று விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் காசல்ரீ மற்றும்  லெதண்டி தோட்டங்களில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்  உரையாற்றுகையில், புதிய கிராம வீடமைப்பு திட்டம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. முற்றாக அனர்த்தங்களில்  குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இவ் வருடத்தில் கட்டப்படுகின்ற வீடுகளை விட அடுத்த வருடம் வீடமைப்பு திட்டம் பரந்த அளவிலே நடைபெறும் என தெரிவித்தார். கிராமபுர மக்கள் மத்தியில் வீடு கட்டும் கலாசாரம் அதிகமாக  காணப்படுகின்ற போதும் நமது சமூகத்தில்  ஆர்வம் சற்று குறைவாக காணப்படுகின்றது. எனினும் மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டம் எவ்வாறான சவால்கள் வந்தாலும் சிறந்தமுறையில் முன்னெடுப்போம் என்றார்.

4979640a-06b3-43a7-a792-a09db22d0839

 

SHARE