வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமிழகத்தின் புதிய முதல்வருக்கு வாழ்த்து

267

தமிழகத்தின் புதிய சரித்திரம் படைத்த தலைவியே… புரட்சித்தலைவரின் வழியில் இரண்டாவது தடவையாக தொடர்ந்தும் முதல்வராக மக்களது அன்பின் ஆணையை ஏற்று பதவி ஏற்கவுள்ள தனிச் சிறப்புமிக்க தமிழகத்தின் புதிய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவருக்கு வாக்களித்து அவரை தொடர்ந்தும் முதல்வராக வெற்றிக்கிரீடம் தரிக்கவைத்த எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்து அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து நிற்கின்றேன் என்றும், அதேவேளை உருவாகவுள்ள புதிய அரசு மக்களது அபிலாசைகளை நிறைவேற்றும் ஓர் வினைத்திறன் மிக்க அரசாக செயல்படும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இலங்கையின் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவி ஏற்கவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை வாழ்த்தி தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

deneeswaran-cc

 

SHARE