கேலிச்சித்திரத்தில் இனவாதம்: சுவிஸ் மாணவர் இடைநீக்கம்

307

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

சுவிட்சர்லாந்தில் கலை கல்லூரி மாணவர் ஒருவர் இனவாதம் தொடர்புடைய கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டதால் அந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

சுவிஸ் நாட்டின் Valais மாகாணத்தில் அமைந்துள்ள கலை கல்லூரி மாணவர் ஒருவர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும், உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இனவாதம் என்பதை ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகம் யூத எதிர்ப்பு மற்றும் மக்களிடையே வெறுப்பை தூண்டி விடுதல் உள்ளிட்டவையை எந்த உருவகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர் மீது இறுதி முடிவை எடுக்கும் முன்னர் இதன் பின்னணி குறித்து முழுவதுமாக அறிந்து கொள்ளவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மட்டுமின்றி முன்னர் பதிவேற்றிய அனைத்து கேலிச்சித்திரங்களையும் அவர் அப்புறப்படுத்தியுள்ளார்.

மாணவர் வரைந்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள் அனைத்தும் யூதர்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE