வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையினால் தொடர்ந்து நடாத்தப்பட்ட கலைப்போட்டிகளின் மற்றுமோரு நிகழ்வு யோகபுரம் மாகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம், அரிச்சந்திர மயான காண்டம் மற்றும் சமூக நாடக போட்டிகள் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னி எம்.பி சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.