வவுனியா மாவட்ட உதைப்பாந்தாட்ட சங்கத்தலைவர் மீது நேற்று ( 21.05.2016) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் போட்டி நடைமுறைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக ஒரு கழகத்திற்கு விளையாட்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தடைவிதிக்கப்பட்ட கழகத்தினர் அவர்களுக்கு நெருக்கிய அரசியல்வாதி ஒருவரிடம் தெரியபடுத்திய போது, அவ் அரசியல்வாதி உதைப்பந்தாட்ட சங்கத்தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடை உத்தரவினை ரத்து செய்யும் படி கோரியுள்ளார். இதனை சங்கத்தலைவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த தேவைக்காக வவுனியா வேப்பங்குளத்திற்கு சென்ற அவரை (வவுனியா மாவட்ட உதைப்பாந்தாட்ட சங்கத்தலைவர் ) வழிமறித்து தடை உத்தரவு பிறப்பிக்கப்ட்ட அணியினர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் காயமடைந்த உதைப்பந்தாட்ட சங்கத்தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தகவலும் படங்களும் :- காந்தன்