கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மனைவி வைத்தியசாலையில் அனுமதி

280

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் இளம் பெண்ணொருவர் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் வசித்துவரும் இளம் பெண்ணொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த குபேந்திரராஜா கீர்த்தனா (வயது 24) எனும் பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்கிய நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் இருந்த வேளை கணவனே கத்தியால் குத்தியதாகவும் தற்போது கணவன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.atacked

0

 

0

 

0

 

0

 

New

 

 

SHARE