சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர
அனுர சேனாநாயக்க விளக்கமறியலில்
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சேனாநாயக்க இன்று பிற்பகல் 4,30மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் அனுர சேனாநாயக்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று கைது செய்தனர்.
2012ம் ஆண்டு வசீம் தாஜூடீன் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை விபத்தாக சித்தரித்து, கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்து தடயங்களை அழித்ததாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.