தமிழ் இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் அனிருத்.
கொலவெறி பாடல் மூலம் அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இந்த பாடலின் மேக்கிங் வீடியோ 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இவர் இசையமைத்த டானு டானு பாடல் 15 மில்லியனை கடந்து மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. இப்பாடலின் Lyric Versionம் 13 மில்லியனுக்கு மேல் ஹிட்ஸ் அடித்துள்ளது. மொத்தத்தில் இப்பாடல் மட்டுமே 2 கோடியே 80 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
மேலும் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலும் 12 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது.
ஆக மொத்தத்தில் யூடியுப் ஹிட்ஸில் தமிழ் சினிமாவில் அனிருத் தான் நம்பர் 1.