பெண்கள் எல்லாம் எப்பவும் இப்படித்தான், ஏமாத்திருவாங்கனு சினிமாவில் வரும் பாட்டுகளுக்கு பஞ்சம் இல்லை.
பெரும்பாலான ஹீரோக்கள் தங்கள் படங்களில் பெண்கள் காதலித்து ஏமாற்றிவிடுவார்கள் என ஒரு பாட்டை வைத்துவிடுவார்கள்.
இதை மெய்யாக்கும் பொருட்டு, சமீபத்தில் வெளியான நீயா நானா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதலிக்கும் எண்ணம் உள்ள பெண்கள் தங்கள் பெற்றோரை எப்படி சம்மதிக்க வைப்பீர்கள் என்ற தலைப்பில் பேசினர்.
ஆரம்பத்தில் காதலுக்கு ஆதரவாக பேசிய பெண்களில் பெரும்பாலானோர் நிகழ்ச்சி முடியும்போது பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றால் காதலை மறந்து விட்டு பெற்றோர் பார்க்கும் வரனையே கல்யாணம் செய்வோம் என்றனர்.
எப்படியாயினும் பெற்றோரின் விருப்பத்தோடு காதல் திருமணம் செய்வோம் என்று சொல்வார்கள் என எதிர்பார்த்த பலருக்கும் இது கொஞ்சம் அதிர்ச்சி தான்.
வழக்கம்போல இதைப் பார்த்த இளைஞர்கள் இவங்க இப்படித்தானு சமூக வலைதளங்களில் கமெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..