யாழ்ப்பாணம் – கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் கைதுசெய்யப்பட்ட “ரொக்” குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள் மற்றும் தொலைபேசி இரண்டும் கைப்பற்றியுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகளினது மாணவர்கள் என்பதுடன், எதிர்வரும் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவிருப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பாரிய வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவர்கள் என தேடப்பட்டு வரும் கும்பலுக்கும் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த இருவரையும் எதிர்வரும் 06 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் யுட்சன் உத்தரவிட்டுள்ளார்.