ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு நாள் மற்றும் 20 ஒவர் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியும், மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோனி தலைமையிலான 16 பேர் கொண்ட ஒருநாள், 20 ஒவர் கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ.
டோனி (அணித்தலைவர்), கே.எல்.ராகுல், ஃபசல், மணீஷ் பாண்டே, கருண் நாயர், அம்பதி ராயுடு, ரிஷி தவான், அக்ஸர் பட்டேல், ஜெயந்த் யாதவ், பும்ரா, பரிந்தர் சரண், மன்தீப் சிங், கேதர் ஜாதவ், தவல் குல்கர்னி, ஜெய்தேவ் உனத்கட், சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டெஸ்ட் அணி அறிவிப்பு:
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு.
விராட் கோஹ்லி தலைமையிலான 17 பேர் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்தது பிசிசிஐ.
விராட் கோஹ்லி (அணித்தலைவர்), முரளி விஜய். ஷிகர் தவான், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ரோஹித் ஷர்மா, ரித்திமான் சாஹா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ் குமார். அமித் மிஷ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.