சந்தானம் தற்போது காமெடி வேடங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
தில்லுக்கு துட்டு படத்தையடுத்து சர்வர் சுந்தரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
இதனையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குனர் மணிகண்டனும் மீண்டும் ஒரு படத்தில் கை கோர்க்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அவர் இதை மறுத்துள்ளார், சந்தானத்துடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை, யாரும் என்னை அணுகவில்லை என்று கூறியுள்ளார்.