
இரண்டு ஆண்டுகளே இந்த தேசிய அரசாங்கம் நீடிக்கும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள தேசிய அரசாங்கத்திலிருந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் நிச்சயமாக, சுதந்திரக் கட்சி விலகிக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தனியாக ஆட்சி அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் கடந்த 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி உருவாக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை தவிர்க்கும் நோக்கிலேயே தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆளும் கட்சி கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பங்கேற்பதில்லை எனவும் ஜனாதிபதி பங்கேற்கும் கூட்டத்தில் மட்டுமே அவர்கள் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால வரவு செலவுத் திட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யோசனைகளை வெற்றியடைச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.