டிவில்லியர்ஸை புகழ்ந்த கோஹ்லி

345

images

ஐ.பி.எல் தொடரின்முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்குமுன்னேறியது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 158 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 29 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

வீராட் கோஹ்லி டக் அவுட் ஆனார். கெயில், வாட்சன், ராகுல் உள்ளிட்டோரும் ஆட்டமிழந்தனர்.

எனவே தோல்வியடையும் என்று கருதிய நேரத்தில் டிவில்லியர்ஸ்அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இதனால் 18.2 ஓவர்களில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து வீராட் கோஹ்லி கூறுகையில், இந்தப் போட்டி உலகின் தலைசிறந்ததுடுப்பாட்ட வீரர் யார் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைக்கிறேன்.

எங்களை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற டிவில்லியர்ஸை தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

SHARE