கனடாவில் சிறப்பாக நடந்த தமிழர் கிரிக்கெட் போட்டி

297

u-19_australia-735x400

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (Mtcl)இன் 22வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு கடந்த மே மாதம் 22ம் திகதி அன்று ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park )இல் மிகவும் சிறந்த முறையில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியை ஐடியல் டெவெலொப்மெண்ட் நிறுவனத்தின் Ceoவான ஷஜி நடா(Shaji Nada) ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ஜெய் நடராஜா(Jay Nadarajah) பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த நிகழ்ச்சியானது கனடா நாட்டின் கொடி மற்றும் Mtcl அமைப்பின் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. அதன் பின்பு எமது தாய் நாட்டில் நடந்த போரின் போது மாண்ட வீரர்களையும் மக்களையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

அதன் பின்பு, Mtcl தீபம் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஒவ்வொரு அணியின் தலைவர்களும், சென்ற ஆண்டின் Super League Challenge Trophy வெற்றி அணியின் தலைவர் தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapabathy) , முதலாம் இட அணியின் தலைவர் அத்துல் டிவேடியா(Atul Divedia), சென்ற ஆண்டின் Most Valuable Player மனோ தர்மராஜா(Mano Tharmarah) ஆகியோர் பங்கெடுத்தமை சிறப்பம்சமாகும்.

அதனைத்தொடர்ந்து சென்ற ஆண்டின் Super League Challenge Trophy வெற்றி அணியின் தலைவர் தமது வெற்றிக்கேடயத்தை பிரதான அனுசரணையாளரான ஜெய்சுரேஷ் ஜெகநாதன் (Jeysuresh Jeganathan) அவர்களிடமும், முதலாம் இட அணியின் தலைவர் தமது அணியின் வெற்றிக்கேடயத்தை அதன் பிரதான அனுசரணையாளரான திரு நாகராஜா(Thiru Nagarajah ) அவர்களிடமும் கையளித்தார்கள். அடுத்த அம்சமாக ஒவ்வொரு அணியின் தலைவர்களும் அறிமுகம் செய்யப்பட்டு Super League Challenge Trophyயின் அருகிலும் முதலாமிடTrophyயின் அருகிலும் நிற்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்த வருடமும் அனைத்து அணிகளும் இவ்விரு பெருமைமிக்க கேடயங்களை கைப்பற்றுவதற்காகவே போட்டியுடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 2015இன் Most Valuable Player(Mvp)ரான மனோ தர்மராஜா(Mano Tharmarah)க்கு Zenplus நிறுவனத்தின் Ceoவும், Mvp மேலுறை(Jacket)யின் அனுசரணையாளருமான ஜெலன் ஆறுமுகநாதன்(Jelan Arumuganathan)னால் Mvp மேலுறை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

அதன் பின்பு 2015ம் ஆண்டில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரரான அட்லஸ்-A(Altas-A) அணியை சேர்ந்த மனோ தர்மராஜா(Mano Tharmarah)க்கு ஆரஞ்சு(Orange) தொப்பி(Cap)யும், அதிக ஆடமிழப்பு செய்த வீரரான கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம்(Gps) அணியை சேர்ந்த ரங்கன் சந்திரகாந்தன்(Rangan Santhirakanthan)க்கு பர்பிள் (Purple ) தொப்பி(Cap)யும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அடுத்த அம்சமாக நைனாதீவு துடுப்பாட்ட அணி(Ncc)யின் வெற்றிகரமான 25வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கேடயம் வழங்கியதுடன் Cakeம் வெட்டி Mtcl அமைப்பினர் தமது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த பிரமுகர்களில் பிரகால் திரு(Piragal Thiru) மற்றும் Lankasri Ceo சுரேஷ் சிறி (Suresh Sri) ஆகியோர் சிற்றுரை ஆற்றியதுடன் Mtcl அமைப்பு மென்மேலும் சிறப்புற பல வருடங்கள் வெற்றிவாகை சூடி வளர வேண்டும் என்றும் வாழ்த்தினர்.

இந்நிகழ்வின் இறுதி அம்சமாக ஒவ்வொரு அணியினரின் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது சிறப்புற நடைபெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் Mtcl அமைப்பினர் தமது நன்றியை தெரிவிக்கின்றனர்.

கீழே, இவ்வருடம் Mtcl அமைப்பில் விளையாடும் அணிகளின் விபரங்களும் தலைவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  • Atlas A Cricket Club – Kajan Eramparamoorthy
  • B-Town Boyz Cricket Club – Suthes S
  • Blue Birds Cricket Club – Theesan Suppiah
  • Bns Cricket Club – Nesan Amirthalingam
  • Cheetahs Cricket Club – Mayooran Shan
  • Chola Cricket Club – Sujan Arumugam
  • Cougars Cricket Club – Tharshan Ratnasapabathy
  • Eelam Kings Cricket Club – Thanesh Theivendran
  • Gps Cricket Club – Mithulan Panchalingam
  • Inuvil Boys Toronto Cc – Sutharshan Kuddy
  • Nainativu Cricket Club – Pj
  • Sauga Boyz Cricket Club – Thibakaran Annalingam
  • Toronto Blues Cricket Club – Atul Divedia
  • Warrios Cricket Club – Sanjey Mayandi
  • Youngstars Cricket Club – Kishok Vijeyaratnam
  • Western Cricket Club – Thaya Manickavasagar

 

அன்றைய தினம் நடந்த போட்டியில் 11 அணியும் இறுதி போட்டியில் மோதிக் கொண்டன.

 

SHARE